25 SIM அட்டைகளைப் பதிவு செய்த இளையர்: மோசடியில் $35,000 இழப்பு

25 SIM அட்டைகளைப் பதிவு செய்த இளையர்

25 SIM அட்டைகளைப் பதிவு செய்த இளையர்

பணப்பலனுக்காக SIM அட்டைகளைத் தமது பெயரில் பதிவு செய்ததாக 19 வயது இளையர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முகமது ரிட்ஸ்வாண்டி மஸ்லி (Muhammad Ritzwandy Mazli) நேற்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மொத்தம் 25 SIM அட்டைகளைப் பதிவு செய்வதற்குத் தமது தனிப்பட்ட விவரங்களை அவர் வழங்கியதாக கூறப்பட்டது.

அந்த SIM அட்டைகளில் இரண்டை அடையாளம் தெரியாத ஒருவர் மோசடி செயல்களுக்குப் பயன்படுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 35,000 வெள்ளியை இழந்துள்ளனர்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் இரு நண்பர்கள் SIM அட்டைகள் பதிவு செய்ய உதவுமாறு கேட்டதாக ரிட்ஸ்வாண்டி தெரிவித்தார். தொடர்ந்து, இவ்வாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவர் SIM அட்டைகளைப் பதிவு செய்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

அதற்குப் பதிலாக 120 வெள்ளி பெற்றதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார். இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன: உள்துறை அமைச்சர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top