போத்தல் குவளைகள் ஒப்படைத்தால் 10 காசு
சிங்கப்பூரில் பான போத்தல் மற்றும் குவளைகளுக்கு 10 காசு முன்பணம் செலுத்தும் திட்டம் வரும் ஏப்ரல் முதலாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது.
பானங்களை வாங்கும் போது முன்பணமாக செலுத்தப்படும் 10 காசை, பயன்படுத்திய போத்தல் மற்றும் குவளைகளை குறிப்பிட்ட சேகரிப்பு மையங்களில் திருப்பிக் கொடுத்தால் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குத் தயாராக மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக பான நிறுவனங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் திட்டத்தை ஓராண்டுக்கு ஒத்திவைத்தனர்.
நிறுவனங்கள் தங்களிடம் இருப்பில் உள்ள பானங்களை விற்றுத் தீர்க்க ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புறத் துறை மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார். முன்பு வழங்கப்பட்ட மூன்று மாத காலம் போதுமானதல்ல என நிறுவனங்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய திட்டத்துக்கு ஏற்ப போத்தல் மற்றும் குவளைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால், அதற்கான தயாரிப்புகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஏப்ரல் முதலாம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை நிறுவனங்கள் தங்களின் தற்போதைய இருப்புப் பானங்களை முடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திட்டம் ஏப்ரல் முதலாம் தேதி அமலுக்கு வந்தாலும், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட போத்தல் மற்றும் குவளைகள் சில மாதங்களுக்குப் பிறகே சந்தையில் கிடைக்கும் என டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
Grab பயனர்களுக்கு தகவல்: சேவைக் கட்டணம் 30 காசு உயர்வு
