பிரித்தம் சிங் விவகாரம்
எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் பொய்யான தகவல் வழங்கியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று அவைத் தலைவருமான அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல் வழங்குவது மிகவும் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சத்தியப்பிரமாணம் எடுத்துள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உண்மையை மறைப்பது அல்லது பொய் கூறுவது மிகப் பெரிய குற்றம். சில நாடுகளில் அரசியல் தலைவர்கள் பொய், ஏமாற்று அல்லது சட்ட மீறல்களில் ஈடுபட்டும் எந்தவொரு நடவடிக்கையும் இன்றி தப்பிக்கிறார்கள். ஆனால் அத்தகைய நடைமுறைகள் சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று இந்திராணி ராஜா கூறினார்.
இந்த வழக்கில் வெளிவந்த தகவல்கள் கவலை அளிப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தையும் நேர்மையையும் பாதுகாக்க வேண்டிய உயரிய பொறுப்பு கொண்டவர்கள் என்பதை இது நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன் பொய் தெரிவித்ததாக பிரித்தம் சிங்கிற்கு நீதிமன்றம் மொத்தம் 14,000 சிங்கப்பூர் வெள்ளி அபராதம் விதித்துள்ளது.
SEA Games: சிங்கப்பூர் பூப்பந்துச் சங்கத்தில் அதிருப்தி வெளிப்பாடு
