பிரித்தம் சிங் வழக்கு தீர்ப்பு முழு விளக்கம்
பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் மற்றும் துணைத்தலைவர் பைசல் மனாப் ஆகியோரின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளதாக அவைத் தலைவர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தின்போது, இந்த விவகாரம் அதிகாரப்பூர்வமாக எடுத்துரைக்கப்படும் என அவர் கூறினார்.
திருவாட்டி ரயீசா கான், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பொய் தகவல்களை வழங்குவதற்கு சில்வியா லிம், பைசல் மனாப் உள்ளிட்ட மூவரும் வழிகாட்டியிருந்தால், அது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை அல்ல என்றும் இந்திராணி ராஜா வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்பு, பிரித்தம் சிங் வழக்குத் தீர்ப்புக்குப் பிறகு எழுந்துள்ள அரசியல் விவாதங்களுக்கு மேலும் வலுவூட்டியுள்ளது.
கேலாங் பகுதியில் அதிரடி சோதனை: 43 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்
