SkillsFuture நிரப்புத்தொகை
சிங்கப்பூரில் SkillsFuture நிரப்புத்தொகையைப் பயன்படுத்த ஆர்வம் அதிகரிப்பு
சிங்கப்பூரில் SkillsFuture நிரப்புத்தொகையைப் பயன்படுத்தப் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் 31ஆம் தேதிக்குள் 500 வெள்ளி நிரப்புத்தொகையைப் பயன்படுத்தி முடிக்க வேண்டிய நிலையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான முன்பதிவுகள் அண்மையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக பயிற்சி நிலையங்கள் தெரிவித்தன.
அத்தகைய பயிற்சி நிலையங்களில் ஒன்றான நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி, மீன் வளர்ப்பு, ஆளில்லா வானூர்தி இயக்கம், திறன்பேசி மூலம் புகைப்படம் எடுப்பது போன்ற பயிற்சிகளுக்கு அதிகமானோர் பதிவு செய்து வருவதாகக் கூறியது.
2020ஆம் ஆண்டில் 25 வயதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு 500 வெள்ளி SkillsFuture நிரப்புத்தொகை வழங்கப்பட்டது. அதன் பயன்பாட்டு காலக்கெடு நெருங்கி வருவதால், இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலேயே 2,000 முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கமாக மாதத்திற்கு 300 முதல் 350 முன்பதிவுகள் மட்டுமே கிடைக்கும் நிலையில், தற்போதைய எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதாக நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி குறிப்பிட்டது. இதன் மூலம் மக்களிடையே பொழுதுபோக்கு மற்றும் வாழ்வியல் சார்ந்த திறன்களில் ஆர்வம் அதிகரித்திருப்பது தெளிவாகிறது.
வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலை | இன்றே விண்ணப்பிக்கவும்
