MAS கணிப்பு
சிங்கப்பூர் பொருளாதாரம் 4.1 விழுக்காடு வளர்ச்சி காணும் என தனியார் துறை பொருளாதார நிபுணர்கள் தங்களின் முன்னறிவிப்பை மேல்நோக்கித் திருத்தியுள்ளனர்.
ஏற்றுமதி, உற்பத்தித் துறை, நிதித் துறை, கட்டுமானம், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றமே இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சிங்கப்பூர் பொருளாதாரம் 2.3 விழுக்காடு வளர்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், இவ்வாண்டு 2.4 விழுக்காடும் அடுத்த ஆண்டு 1.9 விழுக்காடும் வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் (MAS) காலாண்டு ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஃப் ஆக வேலை செய்த அனுபவம் உள்ளவர்களா..?? உடனே லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!!
