மேற்கு சிங்கப்பூரில் கன மழையால் திடீர் வெள்ளம் – மக்கள் எச்சரிக்கைக்கு

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்துள்ளது.

நேற்றுப் பிற்பகலில் தீவெங்கும் பெய்த கனமழை காரணமாக மேற்குப் பகுதியில் மட்டும் 113.4 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பிற்பகல் 1.45 மணி முதல் 3.25 மணி வரை பதிவாகியுள்ளது. இது டிசம்பர் மாத சராசரி மழைப்பொழிவின் சுமார் 36% ஆகும் என்று PUB தன் Facebook பக்கத்தில் கூறியுள்ளது.

மழையால் பல கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சில சாலைகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கின. அவற்றில் முக்கியமானவை:

  • பூன் லே வே – கார்ப்பரேஷன் ரோடு சாலைச் சந்திப்பு
  • பூன் லே அவென்யூ – ஜாலான் பூன் லே முதல் பூன் லே டிரைவ் வரை
  • பாண்டான் ரோடு (Pandan Road)
  • பெசாவாட் டிரைவ் (Pesawat Drive)

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை மாற்றி வழிப்படுத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட நான்கு இடங்களிலும் வெள்ளநீர் 30 நிமிடங்களுக்குள் வடிந்ததாக PUB தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top