பேரிடர் பாதித்த 5 நாடுகளுக்கு உதவி அனுப்பும் சிங்கப்பூர்!

இயற்கைப் பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்கு தலா 50,000 சிங்கப்பூர் டாலர் நிவாரணம் வழங்கப்படுவதாக சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

உதவி பெறும் நாடுகள்:

  • இலங்கை
  • மலேசியா
  • தாய்லந்து
  • இந்தோனேசியா
  • வியட்நாம்

தற்போதைய நிலை
▶ இந்தோனேசியாவில் கடந்த வாரம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.
▶ மலேசியா, தாய்லந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் வெள்ளமும் புயலும் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளன.
▶ இலங்கை தற்போது அண்மையில் இல்லாத அளவுக்குப் பேரிடர் தாக்கத்தால் சிக்கியுள்ளது.

பேரிடர் தாக்கம்

  • பலர் உயிரிழப்பு
  • ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்வு
  • முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்தமை

இந்த அவசர நிலையை முன்னிட்டு உயிர்ச் சேதங்களை குறைக்க உடனடி உதவி அவசியம் என்று சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் உள்ளூர் அமைப்புகளுக்குத் தங்களது ஆதரவை அனுப்புகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top