
சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான எல்லை தாண்டிய போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இரு நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களும் நேற்று சந்தித்து, எல்லை போக்குவரத்துத் தேவைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சேவைகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
டாக்சி சேவைகளில் புதிய சலுகைகள்
இனி எல்லை தாண்டும் டாக்சி ஓட்டுநர்கள்,
- பயணிகளை எங்கு வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம்,
- பயணிகள் கேட்கும் உரிய இடத்தில் இறக்கிவிடவும் முடியும்.
இந்த மாற்றம் பயணிகளுக்கு அதிக வசதியையும், ஓட்டுநர்களுக்கு நியாயமான போட்டித்தன்மையையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருநாடுகளும் வாடகை டாக்சிகள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு முறைகளை ஒரே விதிகளின் கீழ் நெறிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.
டாக்சி எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது இருநாடுகளிலும் தரப்புக்கு 200 டாக்சிகள் மட்டுமே எல்லை தாண்டும் சேவைக்காக உரிமம் பெற்றுள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் 500 ஆக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விரிவாக்கம்,
- அதிகரித்து வரும் பயணத் தேவையை பூர்த்தி செய்யும்,
- சட்டவிரோத போக்குவரத்து சேவைகளை குறைக்கும் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
பேருந்து சேவைகளும் மேம்படுத்தப்பட உள்ளன
எல்லை தாண்டி இயங்கும் பேருந்து சேவைகளையும் இருநாடுகள் இணைந்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. இதனால் சீமைத் தாண்டும் பயணங்கள் மேலும் சீராகவும் எளிதாகவும் அமையும்.
